யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றினை இளவாலை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இளவாலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் தலைமறைவாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் அண்மை காலமாக இடம்பெற்ற பல்வேறுபட்டநகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
குறித்த கும்பலினால் சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை களவாடப்பட்ட நிலையில் ஒரு தொகை திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.