பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07.03.23) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் வளாகம் ஆகிய இடங்களுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கொழும்பில் ஏனைய முக்கிய வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.