மெக்ஸிகோவின் – வெராக்ரூஸ் மாநிலத்தில் கைவிடப்பட்ட ட்ரக் வண்டியொன்றில் இருந்து 103 ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட 343 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் குவாத்தமாலா, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் ஈக்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தங்கியிருந்த ட்ரக் வண்டியில் மின் விசிறி மற்றும் காற்றோட்ட வசதிகள் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கைவிடப்பட்டிருந்த ட்ரக் வண்டியொன்றிலிருந்து 53புகலிடக் கோரிக்கையாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது