223
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால், 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது,
நோயுடன் இனம் காணப்பட்ட மாடுகளுக்கு மருதங்கேணி கால்நடை வைத்தியசாலை கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சுகிர்தன் சிகிச்சையளித்து வருகின்றார். வடமராட்சி கிழக்கு, கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவு மாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர்.
Spread the love