238
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07.03.23) அறிவித்தது.
Spread the love