162
மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்களுடன் இணைந்து காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
அதன் போது டெங்கு பரவும் வாய்ப்புள்ள இடங்களை துப்பரவு செய்ததுடன், கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாநகர கழிவகற்றும் பிரிவினர் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன.
அத்துடன் மாநகரசபை அறிவித்தல் வாகனத்தின் மூலம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
Spread the love