அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொிவித்துள்ளது . ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
காவல்துறைமா அதிபர் பதவி, எதிா்வரும் மார்ச் 23ஆம் திகதியுடன் வெற்றிடமாகவுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவிதமான களங்கமும் இல்லாத , இலங்கை காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரையே காவல்துறைமா அதிபராக நியமிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக இலங்கை காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதனால் காவல்துறைமா அதிபா் பதவி வெற்றிடத்துக்கு சிறந்த நியமனம் வழங்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.