சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த அளவில் காணப்படும் அரச நிறுவனங்களையே மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தொிவித்துள்ளாா். இதன் மூலம் செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய எதிர்பார்த்துள்ளதாக அவர் தொிவித்துள்ளாா்.
சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் தொிவித்துள்ள அவா் இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் குறித்த நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். .
Add Comment