யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம்(18) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை 3ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்றுறை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் குறிகாட்டுவானிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை காவல்துறையினர் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Spread the love
Add Comment