246
காதலிப்பதாக கூறி 14 வயது மாணவியை கடத்தி சென்ற இளைஞனை தெல்லிப்பளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை காதலிப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த இளைஞன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த மாணவி புதுக்குடியிருப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மாணவியை மீட்டதுடன், மாணவியை கடத்தி சென்ற குற்றத்தில் இளைஞனையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love