251
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி காவல்நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில் சிறுமி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு காவல்துறையினருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
Spread the love