171
யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.புத்தளம் தில்லையாடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கடலட்டை தொழிலை முன்னெடுக்கும் முகமாக புத்தளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட படகுகள் , தொழிலில் ஈடுபடுத்தப்படாமல் நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை குறித்த 10 படகுகளும் இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதனால் படகுகள் தீக்கிரையாகியுள்ளன.
Spread the love