இந்தியக்கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லைதாண்டிய சட்டவிரோத தொழில்முறையினால் இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழகமக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்தியப் பிரதிஉயர்ஸ்தானிகர் வினோத்ஜேகப் உடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதேகடற்றொழில்அமைச்சர்மேற்கண்டவாறுதெரிவித்தார்..மாளிகாவத்தையில்அமைந்துள்ளகடற்றொழில் அமைச்சில் நேற்று (21.03.2023) இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பாக மேலும் தெரிவித்தஅமைச்சர்
இலங்கையின் கடல்வளத்தினையும், வடபகுதி தமிழ்பேசும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் தவறான கருத்துக்கள் இருநாடுகளுக்கும் இராஜதந்திரநெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடியவை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியக்கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லைதாண்டிய சட்டவிரோத தொழிலைக்கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்படும் இராஜதந்திரஅணுகுமுறைகளின் தொடர்ச்சியாக நேற்று பிரதிஉயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் இருநாடுகளும் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார்.