183
தேசிய ‘புத்தரிசி தினம்’ எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரதில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) புத்தரிசி சேகரிக்கும் நிகழ்வு மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவை நிலையங்களில் இருந்து பெறப்பட்ட புத்தரிசி அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) சம்பிரதாயபூர்வமாக மன்னார் முருகன் கமநல சேவை நிலையத்தில் வைத்து புத்தரிசி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கமநல சேவை நிலையங்களின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிகள் என விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Spread the love