196
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே, ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்? , சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய், சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும் போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்
Spread the love