Home இலங்கைவெடுக்குநாறி ஆலயத்தை அழித்தமைக்கு எதிராக நல்லூரில் போராட்டம்

வெடுக்குநாறி ஆலயத்தை அழித்தமைக்கு எதிராக நல்லூரில் போராட்டம்

by admin

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே, ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்? , சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய், சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும் போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More