176
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து , காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. .நல்லூர் பிரதேச சபையினரால் , பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. அதன் போது ஏலம் எடுக்க வந்த சிலர் பிரதேச சபையினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு , காவல்துறையினர் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.
Spread the love