பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு 250-க்கும் மேற்பட்டோர் பயணித்த கப்பல் ஒன்று பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனா்.
இதனையடுத்து தகவலறிந்த கடலோர காவல்படையினா் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக தொியில்லை. . தீவித்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.