206
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சனிக்கிழமை(1) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தூய செபஸ்தியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் அடக்கஸ்தளத்தில் விசேட பிரார்த்தனை இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் ,குரு முதல்வர் ,மறைந்த ஆயரின் உறவினர்கள்,அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள்,மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Spread the love