171
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை என்பதுடன் குடும்ப , பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அதற்காகவே எதிா்வரும் மே மாதம் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love