Home இலங்கைபுலஸ்தினியின் மரணம் –  சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை வேண்டும்

புலஸ்தினியின் மரணம் –  சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை வேண்டும்

by admin

சாய்ந்தமருது கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுதாரியின் மனைவியான  சாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரணம் குறித்து  சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

 அரச ஆய்வறிக்கை அதற்கு முன்னதான வெளியான  அறிக்கைகளுக்கு முரண்பாடாக உள்ளதாகலும் அதனை தம்மால்   ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு  , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர்,   ஏப்ரல் 26 ஆம் திகதி  சாய்ந்தமருதில்  வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு வெடிப்பில் சாரா ஜஸ்மின் உயிரிழந்தார் என டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக காவல்துறையினா்   தெரிவித்திருந்தனர்.

 அரச ஆராய்ச்சி திணைக்களம் டிஎன்ஏ ஆய்வுகளை மேற்கொண்டு புறித்த அறிக்கையை சமர்ப்பித்ததாக  காவல்துறையினா்   தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More