230
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு,மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என கோசங்கள் எழுப்பினர்.
Spread the love