Home இலங்கைபருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு,மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என கோசங்கள் எழுப்பினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More