இந்திய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் இந்த பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருந்தனர்.
இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன. குறித்த பனிச்சரிவில் சிக்கி 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.