ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த அங்கொட லொக்காவின் உதவியாளரான அத்துரிகிரி ஜெரம் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அத்துரிகிரிய மிலேனியம் சிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தேடப்படும் சந்தேக நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனவும்,அவர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுரிகிரிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.