Home இலங்கைதனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்

தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்

by admin

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பின்னா் , மீண்டும்   சமூகவலைத்தளங்களைப்  பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் .  31 வயதான தனுஷ்க குணதிலக்க, இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்தார்.

கடந்த 2022 நவம்பரில் தனுஷ்க   ,  பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டது.  பின்னர் பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டு     வட்ஸ் அப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்லவும் நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது பிணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம்  தனுஷ்க குணதிலக்க,   முகப்புத்தகம்  மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More