குறித்த கலந்தரையாடலில் மன்னார்,வ வுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பொது அமைப்புகளின் பிரதி நிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதி நிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்றுதான் நாம் கூற வேண்டும். இந்த சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.
ஆகவே இந்த சட்டத்திற்கு தற்போது எழுந்து கொண்டிருக்கிறது. அரசாங்கமானது மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், அலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் மத்தியில் கடமைகள் உள்ளன. ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ. நா சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.