179
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் நேற்றைய தினம் புதன்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்குவில் குளப்பிட்டியை சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் (வயது 17) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் மின் அழுத்தியினை மின் இணைப்புடன் பொருத்த முற்பட்ட வேளை மின்சார தாக்கத்திற்கு உள்ளானதாகவும் , அதனை அடுத்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love