177
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார் .
எதிர்காலத்தில் கோதுமை மா, எண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Spread the love