மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது ராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தம்மால் 80க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுத்துள்ளதாக தொிவித்துள்ள அப்பகுதி மக்கள், உயிாிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனத் தொிவித்துள்ளனா்.மேலும் உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் பல சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம் ஒன்றை குறிவைத்து நேற்று செவ்வாய்க்கிழமை(11) குறித்த விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு பெப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்கள் எதிர்ப்பாளர்கள் மீது விமான தாக்குதல்களை மேற்கொள்வது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது