Home இலங்கைபரந்தன் புகையிரத நிலையத்துள் புகுந்த குண்டர்கள் – ஊழியர்கள் வைத்தியசாலையில்!

பரந்தன் புகையிரத நிலையத்துள் புகுந்த குண்டர்கள் – ஊழியர்கள் வைத்தியசாலையில்!

by admin

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்களின் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய விசேட காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More