ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் செயற்படுத்தப்படும் towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவின் ஏற்பாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் சம்மாந்துறை கோரக்கர் வித்தியாலய மைதானத்தில் கலை கலாசார நிகழ்வுகளும், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கோலாகலமாக இடம்பெற்றது.
அத்துடன் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் இந்நிகழ்விற்கு வருகை தந்ந பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.