212
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
நினைவேந்தலில் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
—
Spread the love