205
குத்தகை நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக்கு (லீசிங்கில்) டிப்பர் வாகனம் எடுத்துள்ளார். அவரது வாகனம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோப்பாய் வீதி சமிஞ்ஞை விளக்கில் தரித்து நின்ற போது அங்கு வந்த நால்வர் தம்மை காவல்துறையினர் எனக் கூறி லீசிங் தவணைப் பணம் செலுத்தவில்லை என டிப்பரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தை லீசிங்கில் கொள்வனவு செய்தவரினால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
தனது வாகனத்துக்குள் அலைபேசி ஒன்று, 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இருந்ததாக முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கோப்பாயைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அவருடன் சென்ற மேலும் மூவரை தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love