190
காலாவதி திகதியை மாற்றம் செய்தமை மற்றும் காலாவதி திகதியை அழித்த நிலையில் ஆயிரத்து 710 சோடாப் போத்தல்கள் யாழ்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கான சோடா விநியோகஸ்தர், காலாவதியான சோடாக்களின் திகதிகளை மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும் கடைகளுக்கு சோடாக்களை விநியோகம் செய்து வருவதாக யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து , யாழ் நகர் பகுதியில் உள்ள குறித்த சோடா களஞ்சிய சாலைக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டார்.
அதன் போது, களஞ்சியசாலையில் இருந்து காலாவதி திகதி மாற்றப்பட்ட ஆயிரத்து 110 சோடாக்களும், காலாவதி திகதி அழிக்கப்பட்ட 600 சோடாக்களும் மீட்ப்பட்டன. அதனை அடுத்து சோடா போத்தல்களை சான்று பொருட்களாக கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர், விநியோகஸ்தருக்கு எதிராக யாழ். மேலதிக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
—
Spread the love