239
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்கள் சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்ரியா, மூக்குத்தி முருகன், கலக்கப்போவது யாரு புகழ் நவீன் மற்றும் குரேஷி ஆகியோருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாத இளவரசர் பஞ்சமூர்த்தி குமரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
Spread the love