249
நண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்பும் வேளை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி , புலோலி சாரையாடி பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான சுந்தரமூர்த்தி சத்யன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்று விட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானார். விபத்தில் காயமடைந்தவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , 24ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Spread the love