267
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , நேற்று இரவு முதல் குறித்த பகுதிக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை பொலிசார் ஏற்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் எவ்வித குற்றசாட்டுக்களும் இன்றி பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
Spread the love