209
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முன் பள்ளி சிறார்களின் போசாக்கினை மேம்படுத்த சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் முன் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு மா வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், வலிமேற்கு பிரதேச சபையினர், வீரபத்திரர் சனசமூக தலைவர், J/174 கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டு சத்துணவு மா வழங்கி வைத்தனர்
Spread the love