204
இலங்கைக்கு கடத்தும் நோக்குடன் அவூடி காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 158 கிலோ கேரளா கஞ்சாவை மண்டபம் காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். தமிழக ராமேஸ்வரம் ஆலய வாகன தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்து வைக்கப்பட்டு இருந்த ஜார்க்கண்ட் மாநில பதிவிலக்கம் கொண்ட அவூடி கார் ஒன்றினை கியூ பிரிவு காவல்துறையினா் மீட்டு , மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினா் காரினை சோதனையிட்ட போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 158 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். குறித்த கஞ்சா , இலங்கைக்கு கடத்தும் நோக்குடன் காரில் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ஆலய வாகன தரிப்பிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் காரினை கொண்டு வந்து நிறுத்திய நபரை அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.
Spread the love