கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை(08) திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது