234
இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் , யாழ்ப்பாண காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது , தாக்குதலுக்கு இலக்கானவருக்கும் , கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை , அடுத்து அந்நபர் இவர் மீது கைகளால் தாக்கியுள்ளார்.
அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கானவர் காவல் நிலையம் சென்று தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்த பின்னர் , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love