211
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் எனவும் தெரிவித்த காவற்துறையினர் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
Spread the love