290
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25.05.23) இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை காவற்துறையினரால் நேற்று (26.05.23) கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love