541
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிரான் பகுதியை சேர்ந்த சடையன் பாலசந்திரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவரை , அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
Spread the love