347
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி சங்கானையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை (02.06.23) இடம்பெற்றது.
சங்கானை பிரதேச கலாசார மண்டபத்தில் ஆரம்பமான நடைபவனி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவுற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் மஞ்சுள செனரத், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரேமினி, வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love