464
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்தித் திருத்தும் மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த மசோதாவிற்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா சட்டமானால் நிதி நெருக்கடியில் உள்ள அமெரிக்க அரசின் சுமைகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் அடிப்படை திட்டங்களை அரசு விரிவுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love