பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை அபேபுர பிரதேசத்தைச் சோ்ந்த 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இருந்த போது குறித்த சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. உயிாிழந்த சார்ஜன்டின்
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.