329
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(7) கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவேளை நாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
Spread the love