491
காரைநகரில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்டபோதே யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி காரை நகர் ஊரி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் 8 கிலோ கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டபோது விசேட அதிரடிப்படையினரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். அதன்போது அவரிடம் இருந்து, போலியான கடவுச்சீட்டுகள் இரண்டும் கைத்தொலைபேசிகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன
குறித்த நபருக்கு மல்லாகம், ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதோடு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தேடப்பட்டு வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love